பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய கட்டிடம் கட்டுவோர்கள் அனுமதி பெற வேண்டும்: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா அறிவிப்பு

schedule
2020-10-09 | 13:25h
update
2020-10-09 | 13:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New Builders in Perambalur District Need Permission: Perambalur Collector Santha Notice

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் சாந்தா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமையும் நிலத்தில் 7000 ச.அடிகள் வரையிலான குடியிருப்பு மற்றும் 2000 ச.அடிகள் வரையிலான வணிக கட்டிடங்கள் நேரடியாக சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடமும், அதற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் மனைப் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடம் கட்ட முனைவோர்களும், பெரம்பலூர் துறைமங்கலம், (3 ரோடு அருகில்), பெரியார் தெரு, என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், அனுமதி பெறப்பட்ட விவரத்தை விளம்பர பலகையில் குறிப்பிட்டு கட்டுமானம் நடைபெறும் இடத்தில் முன் பகுதியில் வைக்கப்பட வேண்டும். அனுமதி பெறாமல் உத்தேசம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.08.2026 - 18:09:15
Privacy-Data & cookie usage: