செட்டிக்குளத்தில் புதிய கட்டிடங்கள் : பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.

schedule
2018-03-29 | 10:05h
update
2026-06-28 | 13:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New buildings in Chettikulam: Perambalur MLA Thamilchelvan opened.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் 9.00 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டிடங்களை பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிக்குளம் மலை அடிவாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவாக ரூ.3.00 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்குடையை எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.00 லட்சம் மதிப்புள்ள செட்டிக்குளம் மகளிர் சுகாதார வளாகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அங்கு இருந்த பெண்களிடம் இந்த சுகாதார வளாகத்தினை சரியான முறையில் பயன்படுத்திகொள்ளுமாறும் அதனை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார;.
இந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ர்ணன், செட்டிக்குளம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 13:08:37
Privacy-Data & cookie usage: