New DMK members admission in Perambalur union!
பெரம்பலூர் ஒன்றியத்தில், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கினங்க, “உடன் பிறப்புகளால் இணைவோம்” திட்டத்தின் மூலம், ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எம்.ராஜ்குமார் தலைமையில், எசனை கிராமத்தில்,”உடன்பிறப்புகளால் இணைவோம்’என்ற திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.
தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளரும் – மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளருமான அண்ணியூர் சிவா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு,கிளைக்கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள், கிளைக் கழக நிர்வாகிகளிடமிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழக பவள விழா ஆண்டு புதிய உறுப்பினர் பதிவு விண்ணப்பத்தாள் படிவங்களையும்,பூத் கமிட்டி படிவங்களையும் பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
இதில் மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அட்சயகோபால், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை,
மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை.பாஸ்கர், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஆதித்யன், லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.