பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய சித்த மருத்துவ பிரிவு: கலெக்டர் தொடங்கி வைத்தார்!

schedule
2020-03-09 | 11:40h
update
2020-03-09 | 11:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New Siddha Medicine Unit at Perambalur District Collectorate Complex: Collector Launches!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களும், பெலாதுமக்களும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய சித்த மருத்துவ பிரிவை கலெக்டர் வே. சாந்தா இன்று தொடங்கி வைத்தார்.

இப்புறசிகிச்சை சித்த மருத்துவ பிரிவு வாரத்தில் இரண்டு நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செயல்படும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்புற நோயாளர் சித்த மருத்துவ பிரிவு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்காகவும், பொதுமக்கள் பயனடையும் பொருட்டும் செயல்படும். இங்கு சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்த்துமா நோய், மூட்டுவலிகள், தோல் நோய், சைனஸ் தொந்தரவு, பெண்களின் கருப்பை கட்டி, தைராய்டு பிரச்சனை, சினைப்பை நீர்கட்டி பிரச்சினை, மாதாந்திர தீட்டு பிரச்சினை, பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்கள் மற்றும் பிற நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். இந்த விழாவில் அதிகாரிகள், சித்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.07.2026 - 11:18:58
Privacy-Data & cookie usage: