புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் ; பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா ஆய்வு

schedule
2020-01-23 | 17:20h
update
2020-01-23 | 17:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New Taluk Office Construction; Perambalur Collector V. Santha inspection

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலவலக கட்டுமானப் பணிகளை, கலெக்டர் வே.சாந்தா இன்று பார்வையிட்டார்.

பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் 1252 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தரைதளத்தில் வட்டாட்சியர் அலுவலகமும், கம்ப்யூட்டர் அறைகளும், பதிவறைகளும், முதல் தளத்தில் தேர்தல் பிரிவு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளது.

Advertisement


ஆய்வின்போது, பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அலுவலகத்தின் கட்டுமானத்தை இரு தளங்களையும் பார்வையிட்ட கலெக்டர், அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் உயரிய தரத்துடன் விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அலுவலகத்திற்கு அலுவல் நிமித்தமாக வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக தேவையான அளவில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தவும், அடிப்படை தேவைகளான கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்டவற்றை போதுமான அளவில் ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.

புதிய வட்டாட்சியா; அலுவலக வளாகத்தை சுற்றிலும் நிழல் தரும் வகையில் அதிகளவில் மரங்களை நடவும், அதன் மூலமாக வட்டாட்சியர் அலுவலகங்கள் இயற்கை எழில் சூழ்ந்த வளாகமாக காட்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

அப்போது டி.ஆர்.ஓ. சுப்பையா, தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 20:46:21
Privacy-Data & cookie usage: