கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை: வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் உடலை மீட்டு கொடுத்த எஸ்.டி.பி.ஐ

schedule
2021-09-01 | 17:56h
update
2021-09-01 | 17:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

No action to petition the Collector: SDPI who recovered the body of her husband who died abroad

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் மகன் ராஜ்குமார் (வயது 26) .அவருடைய மனைவி கவுசல்யா (21). ஒன்றரை வயதில் மகள் உள்ளார் . ராஜ்குமார் கடந்த 2019 ஆண்டிலிருந்து சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் பணிபுரிந்தார் . அவர் வேலை செய்த தொழிற்சாலையில் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அவரது மனைவி, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரிடம், புகார் கொடுத்தும் அவரின் உடலை மீட்க எவ்வித நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை.

Advertisement

இதனால் சோர்ச்து போன அந்த பெண், பெரம்பலூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளை தொடர்புகொண்டு அவருடைய கணவரை உடலை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் ரியாத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் நண்பர்களான, இந்தியன் சோசியல் போரத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இளவரசன் உடலை மீட்டு தர உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

அவர்கள் முயற்சியில், இறந்த இளவரசனின் உடல் இன்று இளவரசனின் சொந்த ஊருக்கு வந்தடைந்தது. கட்சியின், பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது அலி மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அஸ்கர்அலி ஆகியோர் இறந்த இளவரசனின் உடலை அவரது மனைவி கவுசல்யாவிடம் ஒப்படைத்தனர். தன்னலமற்ற இந்த சேவைக்கு கண்ணீர்மல்க அந்த குடும்பத்தினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 07:13:32
Privacy-Data & cookie usage: