பெரம்பலூரில் பிளாஸ்டிக் இல்லா பூமி விழிப்புணர்வு பேரணி : தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் பேரணி

schedule
2018-12-20 | 14:45h
update
2026-07-06 | 11:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

No Plastic in Earth Awareness Rally in Perambalur: Private educational institution students rally

பெரம்பலூரில உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து பிளாஸ்டிக் இல்லா பூமியை உருவாக்க கோரிக்கை வைத்து பேரணி இன்று பெரம்பலூரில் நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

இப்பேரணி நகராட்சி அலுவலகம் அருகே தொடங்கி, விளாமுத்தூர் பிரிவு சாலை வரை நடைபெற்றது. பூமியை நரகமாக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்துகொண்டும், “பிளாஸ்டிக்கை எரிக்காதே, கேன்சரை பெருக்காதே”, “பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம்”, “பிளாஸ்டிக் பகை, உயிருக்குப் பகை”, “ஒழிப்போம் பிளாஸ்டிக்கின் மாசுவை, போர்த்துவோம் பசுமையை” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியாக சென்றனர். இதில் கிறிஸ்டியன், ரோவர், மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கயை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.கிறிஸ்டோபார், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 11:05:52
Privacy-Data & cookie usage: