செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான பரிந்துரை விவரங்கள்

வேலைவாய்பபு அலுவலகம்

schedule
2017-01-04 | 13:41h
update
2026-06-27 | 00:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Nomination information vaccant of nurse post – Employment office கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான பரிந்துரை விவரங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2804 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இப்பணியிடத்திற்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-வகுப்பு கல்வித்தகுதியுடன் 18 மாத கால ஆக்ஸ்லெரி நர்ஸ் மிட்வெய்ப் – பல்நோக்கு சுகாதார செவிலியர் படிப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் 2 வருட ஆக்ஸ்லெரி நர்ஸ் மிட்வெய்ப் – பல்நோக்கு சுகாதார செவிலியர் படிப்புடன் தமிழ்நாடு நர்ஸிங் மற்றும் மிட்வெய்ப் கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

இப்பணியிடத்திற்கு பெண்கள் மட்டுமே தகுதியானவர் ஆவர். மேலும், பொதுப்பிரிவு – 18 – 40 வயதிற்குள்ளும், இதர பிரிவினர்களுக்கு ( SCA, ST, SC, BC, BCM, MBC ) – 18 – 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

மேற்காணும் தகுதியுடைய பதிவுதாரர்கள் அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச்சான்று மற்றும் தமிழ்நாடு நர்சிங் மற்றும் மிட்வெய்ப் கவுன்சிலில் பதிவுச்சான்றிதழ் ஆகியவற்றுடன் 06.01.2017-க்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான பரிந்துரை விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 00:48:39
Privacy-Data & cookie usage: