Notice of power cut for Esanai and Veppanthatta areas!
எசனை துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் பி.செல்வராஜ் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட, எசனை துணை மின் நிலையத்தில் வரும் ஆக.16 செவ்வாய்க் கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கு.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்கள் மற்றும் எசனை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.