Notice of power cut in A. Mettur power station near Perambalur!
பெரம்பலூர்: அ. மேட்டூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது.
எனவே மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியசாமி கோவில், அரசடிக்காடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், கள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் அன்றயை தினம், காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என அ.மேட்டூர் துணை மின்நிலைய உதவிசெயற்பொறியாளர் கலியமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.