சட்ட விரோதமான மதுபான விற்பனை, கடத்தல் தொடர்பான புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு; பெரம்பலூர் கலெக்டர்

schedule
2021-03-05 | 01:25h
update
2026-06-16 | 12:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Notice of telephone number to lodge a complaint regarding illegal liquor sale and smuggling; Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 அறிவிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனையை தடுப்பதற்காகவும், மதுபானக் கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் கடத்தல், பதுக்கல் மற்றும் சட்ட விரோதமான விற்பனை போன்ற மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இதுபோன்ற புகார்களை பெரம்பலூர் டாஸ்மாக் உதவி மேலாளர் 9787507177 என்ற கைபேசி எண்ணிலும், பெரம்பலூர் டாஸ்மாக் உதவி மேலாளர் (கணக்குகள்) 9123555728 என்ற கைபேசி எண்ணிலும், இளநிலை உதவியாளர் 9894236840 என்ற கைபேசி எண்ணிலும், இளநிலை உதவியாளர் 8344225319 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

எனவே பொதுமக்கள் சட்ட விரோத மதுபான விற்பனை, மதுபான கடத்தல் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியா; அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மேற்படி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 12:47:37
Privacy-Data & cookie usage: