Notice to stop power supply to Pudukurichi area!
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக, சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின்நிலையத்தில் வரும் ஆக.7 ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிப்பாளையம், திருவளக்குறிச்சி, நல்லூர் ஆகிய கிராமங்களுக்கு அன்றை தினம் காலை 9 மணி முதல் பணி நிறைவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்த உடன் மின் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.