Nov. 26, Marxist Party Perambalur – Ariyalur District Special Assembly meeting decides to win the general strike.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் 21.11.2020 சனிக்கிழமையன்று துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் இர.மணிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, எஸ்.அகஸ்டின், எம்.இளங்கோவன், பி.ரமேஷ், பி.துரைசாமி, கே.மகாராஜன், எ.கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய குழு முடிவுகள் குறித்து மாநிலசெயற்குழு உறுப்பினர் எ.லாசர் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு முடிவுகள் குறித்து எம்.சின்னதுரை விளக்கி பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மத்தியில் ஆளும் மோடி அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் செய்து 44 சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கியும் தொழிலாளர்கள் உரிமையை பறிப்பதை கண்டித்தும், விவசாயத்தை சீரழித்து விவசாயிகளை பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கின்ற நிலையை கண்டித்தும் இலவச மின்சாரத்தை பறிக்கின்ற மின்சார சட்ட திருத்தம் கொண்டு வருவதை கண்டித்தும் பொது விநியோக திட்டத்தை சீரழித்து முற்றிலும் கைவிடுவதை கண்டித்தும் விவசாய தொழிலாளர்களுக்கு கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலையை 200 நாட்களாக்கி கூலியை உயாத்தி கொடுத்து நகர்ப்புற மக்களுக்கும் விரிவாக்கம் செய்திட வலியுறுத்தியும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ 7.500 நிவாரணம் வழங்கக் கோரியும் மத்திய அரசு கடைபிடிக்கும் தொழிலாளிகள், விவசாயிகள், மக்கள்விரோத நடவடிக்கைகளுக்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சி அமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. அதை வெற்றி பெறச் செய்ய இந்த பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய வெங்காயம் பதுக்கலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை கைது செய்யாமல் மாவட்ட நிர்வாகம் கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் பாக்டம்பாஸ் கலப்பட உரம் விற்பணை செய்ததால் சிறுகுடல், பேரளி, சித்தளி, அருமடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கலப்பட உரம் விற்பனை செய்த உரக்கடை உரிமையாளரை மட்டும் கைது செய்து விட்டு மொத்த விற்பனையாளர் ஆளும் கட்சியை சோந்தவர் என்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார். மாவட்டக்குழு, மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள், கிளைசெயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!