பெரம்பலூர், குன்னம் தொகுதி NTK வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்! மாட்டு வண்டியிலும், ஏர் கலப்பையுடன் வந்தனர்!!

schedule
2026-03-30 | 20:19h
update
2026-03-30 | 20:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

NTK Candidates for Perambalur and Kunnam Constituencies File Nominations! They Arrived in Bullock Carts and with Ploughshares.

பெரம்பலூர் தனித் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜான்சிராணி (43) இன்று காலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாத தனது கட்சியினருடன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வழியாக ஏர்கலப்பை, நெற்கதிர்மணிகளுடன் ஊர்வலமாக வந்தார்.

Advertisement

பெற்றோர்கள் க. ரகுநாதன் – ராஜலட்சுமி, MA,B.Ed பட்டம் பெற்றுள்ளார். பிசினஸ் செய்து வருகிறார்.
கணவர் பெயர் : ராஜகோபாலன், துறைமங்கலம், நியூ குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். ஜானு @ ஜான்சிராணி கட்சியில் மாநில மகளிர் பாசறை துணைச்செயலாலர் உள்ளார்.

குன்னம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள் வேட்பாளர் கீர்த்திவாசன் (27 ) மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.முன்னதாக, குன்னம் கிராம‌ அண்ணா நகர் பகுதி முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை‌ மேளதாளத்துடன் மாட்டு வண்டியில்,கையில் ஏர் கலப்பை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இரத்தினவேல், மண்டல ராஜோக்கியம் உள்பட நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர்.

ரா.கீர்த்திவாசனின் பெற்றோர்கள்: ராமர் ராஜலட்சுமி, B.E.,LL.B., பட்டம் பெற்று வழக்கறிஞராக உள்ளார். திருமணமாகதவர். குன்னம் தாலூகா, சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த இவர், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் வசித்து வருகிறார். நாதக-வில் மாநில ஒருங்கிணைப்பாளர், பெரம்பலூர் மாவட்டத்தின் பொறுப்பாளர் என கட்சி பணி செய்து வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2026 - 03:01:43
Privacy-Data & cookie usage: