பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள்

schedule
2017-01-27 | 07:01h
update
2026-06-22 | 13:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Nutritional and culinary assistant organizer in school nutrition centers vaccant

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு மையங்களில் 21 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 19 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்திட 30.01.2017 முதல் 15.02.2017 மாலை 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாம் வகுப்பு (தேர்ச்சி (அ) தோல்வி) அடைந்திருக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

சத்துணவு மைய சமையல் உதவியாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5 ம் வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர் பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு குறிப்பிட்ட தேதியில் 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பத்தாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீக்குள் இருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜெராக்ஸ் நகல், இருப்பிடச் சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களால் இருப்பின் அதற்கான சான்றிதழ், உடல் ஊனமுற்றோராய் இருப்பின் அதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் 30.01.2017 முதல் 15.02.2017 மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.

15.02.2017 அன்று அலுவலக நேரத்திற்குப் பிறகு கால தாமதமாக நேரிலோ அல்லது தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலே குறிப்பிட்ட தேதிக்குள் வந்து சேரும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு பரிசீலிக்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் மீண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களை www.perambalur.nic.in என்ற இணையதள முகவரியில் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் (சத்துணவு) பிரிவு, மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் காலிப்பணியிடங்கள் மற்றும் இனசுழற்சி விபரங்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளம்பர பலகையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்ப்பட்டுள்ளது

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 13:21:05
Privacy-Data & cookie usage: