சத்து மாவை கடத்தி விற்க முயன்ற ஊட்டசத்து மைய உதவியாளர் தற்காலிக பணிநீக்கம்!

schedule
2017-02-02 | 18:39h
update
2026-06-25 | 10:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

nutritional center assistant suspended : who tried to sell a dough bags

பெரம்பலூர் மாவட்டம், அனுக்கூர் அருகே உள்ள அ.குடிகாடு ஊட்ட சத்து மையத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவர் ராஜம்மாள். (வயது 48).
இவர் நேற்று இரவு ஊட்டசத்து மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து மாவு மூட்டைகளில் 2 மூட்டை சத்து மாவை வெளியே எடுத்து வந்துள்ளார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து வட்டார ஊட்டசத்து அலுவலர் அருணாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடத்திய விசாரணையில் உதவியாளர் ராஜம்மாள் முறைகேடாக சத்துமாவு மூட்டையை கடத்தி விற்க முயன்றது தெரிய வந்தது.

மாவட்ட ஊட்ட சத்து அலுவலர் முத்துமீனாள் முறைகேடான செயலில் ஈடுபட்டதாக ராஜம்மாளை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 10:09:16
Privacy-Data & cookie usage: