Of water each day through the Karnataka government to try to guard the dam can S. Nallasami


நாமக்கல்தினம்தோறும் நீர்ப்பங்கீடு முறை இருந்திருந்தால், காவிரியில் உபரி நீர் கடலில் வீணாக கலப்பது தடுக்கப்பட்டிருக்கும். மேலும் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயற்சிகளை செய்திருக்காது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் செ.நல்லசாமி தெரிவித்தார்.  

நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு கூறும் காரணம் தமிழகம் காவிரி ஆற்றில் வரும் உபரி நீரை வீணாக கடலில் கலக்கிறது என்பது தான். நிகழாண்டில் மட்டும் சுமார் 170 டிஎம்சி அளவுக்கு காவிரி நீர் கடலில் கலந்துள்ளது என கர்நாடக அரசு கூறுகிறது.

மாதம்தோறும் நீர்ப்பங்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து தினம்தோறும் நீர்பங்கீடு என்ற உத்தரவை பெற வேண்டும்.  அப்போது தான், தமிழகத்தில் குறுவை சாகுபடியும் சாத்தியப்படும். இதன் மூலம் மழைக்காலத்திற்கு முன்னரே மேட்டூர் அணையில் இருந்து சுமார் 50 டிஎம்சி அளவுக்கு தண்ணீரை எடுத்து குறுவைப் பாசனத்துக்கு பயன்படுத்தி இருக்க முடியும். மேலும் மழைக்காலத்தில் வரும் தண்ணீர் பெருமளவுக்கு கடலுக்கு செல்லும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

டெல்டா பகுதியில் விவசாயம் சீரான முறையில் தொடர்ந்து நடைபெறும். பவானிசாகர் அணைக்கு தண்ணீரை தரும் ஆறுகளை இடைமறித்து நீலகிரியில் கடந்த 1965ஆம் ஆண்டு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தயாரிக்க அணைகள் கட்டப்பட்டன. அப்போது கீழ்பவானி பாசனத்து்க்கு பவானிசாகர் அணையில் போதிய தண்ணீர் இல்லையெனில், மின்சாரம் தயாரிக்க தேக்கிவைக்கப்பட்டுள்ள 18.34 டிஎம்சி தண்ணீரில் 4.5 டிஎம்சி தண்ணீரை மட்டும் வைத்துக்கொண்டு மீதி தண்ணீரை பவானிசாகர் அணைக்கு திறந்துவிட வேண்டும் என அராசணை வெளியிடப்பட்டது.  ஆனால் இதுவரை ஒரு ஆண்டு கூட அரசாணையின்படி நீலகிரியில் உள்ள மின் அணைகளில் இருந்து தண்ணீர் பவானிசாகர் அணைக்கு திறந்துவிடப்படவில்லை.  

மேக்கேதாட்டு அணை மூலம் மின்சாரம் தயாரிப்பதே நோக்கம் என்று கர்நாடக அரசு கூறினாலும், மின்தேவையை காரணம் காட்டி தமிழகத்துக்கு அம்மாநில அரசு தண்ணீர் தராது. இதனால் தமிழகத்தின் ராசிமணல் பகுதியில் மத்திய அரசின் நீர்வள ஆணையம் மூலம் அணையை கட்டி, அங்கு மின்சாரம் தயாரித்து கர்நாடகத்துக்கு வழங்கலாம்.

இங்குகூட கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்ககூடாது.  நிகழாண்டில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பைகாட்டிலும் சுமார் 50 சதவீதம் வரை குறைவாகவே மழை பெய்துள்ளது.சென்னையில் 54 சதவீதம் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் கோடையில் கடுமையான குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக குடிநீர் ஆதாரங்களை சீரமைத்துக்கொள்ளவும், நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை வீணாகமல் சேமித்துவைக்கவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையெடுக்க வேண்டும்.  3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ள நிலையில், அங்கு விவசாயக் கடனை அம்மாநில அரசுகள் ரத்து செய்துள்ளன. விவசாயிகள் இப்போதுள்ள நிலையில் கடன் தள்ளுபடி தீர்வாகாது. அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதுபோல், விவசாயத்துக்கு வேளாண் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.  

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 50 சதவீத அளவுக்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் ஒரு சிப்பத்துக்கு(40 கிலோ மூட்டை) ரூ.25 வரை அதிகாரிகள் பணம் வசூல் செய்கின்றனர். இதுபோன்ற செயல்களை தவிர்த்து எந்த நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகளிடமிருந்து முழுமையாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும்.  

நெகிழிப்பைகள் பயன்பாட்டுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்ட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். அதே சமயத்தில் மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாமல் நெகிழி தடை என்பது, பெருமளவில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.  மரவள்ளிக்கிழங்கில் இருந்து சூழலுக்கு மாசு ஏற்படாத பைகள் தயாரிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான சேகோ ஆலைகள் உள்ள நிலையில், இந்த பை தயாரிப்பு குறித்து அரசு விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.  படைப்புழு தாக்குதல் காரணமாக, தமிழகத்தில் மக்காச்சோள மகசூல் முற்றுலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மாதங்களில் கோழித்தீவனம் விலை உயர வாய்ப்புள்ளதால்,  முட்டை விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். 

Tags:

Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!