பெரம்பலூர் அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் சாவு: போலீசார் விசாரணை

schedule
2018-03-13 | 10:16h
update
2026-07-05 | 01:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Old man killed in bike collision near Perambalur: Police investigate

பெரம்பலூர் அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் நேற்றிரவு 10 மணியளவில் பெரம்பலூர் – கோனேரிப்பாளையம் இடைப்பட்ட பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் முதியவர் மீது மோதியதில், படுகாயம், அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று , அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையின் போது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்து போன முதியவர் பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூரை சேர்ந்த கைதியன் (வயது 81) என தெரிய வந்தது.

விபத்திற்கு காரணமான மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய மோட்டர்சைக்கிள் ஓட்டி வந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 01:48:03
Privacy-Data & cookie usage: