பெரம்பலூர் அருகே டீ குடிக்க சாலையை கடக்க முயன்ற, முதியவர் கார் மோதி பலி!

schedule
2019-04-23 | 14:59h
update
2019-04-23 | 14:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Old Man who tried to cross the road near a tea to drink, old man killed in car crash near by Perambalur!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமம், பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 75). விவசாயி. இன்று இவர் டீ குடிப்பதற்காக திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையை கடந்து கொண்டிருந்த செல்லமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், மற்றும் விபத்து மீட்பு படையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்.

அது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 02:01:09
Privacy-Data & cookie usage: