ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான (ஒலிம்பியாட்) திறனறித்தேர்வு

schedule
2017-02-26 | 13:08h
update
2026-06-21 | 09:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Olympiad for the students in perambalur Almighty Vidyalaya School

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஆல்மைட்டி வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளியில் 2ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான (ஒலிம்பியாட்) எனும் திறன் அறித்தேர்வு இன்று நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். டெல்லி யுரோகான் நிர்வாகி சிராஜ்கிர்மானி அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் சிவகாமி முன்னிலை வகித்தார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்து மாணவ மாணவிகள் மொத்தம் 1.350 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

மேலும், பள்ளி வளாகத்தில் கூடியிருந்த பெற்றோர்களிடத்தில் கல்விப்பணியில் பெற்றோர்களின் கடமை குறித்து போராசிரியர் எஸ்.வைரமணி சிறப்பு உரை நிகழ்த்தினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில் அணுகுமுறை இருக்க வேண்டும் எனவும், குழந்தைகளின் செயல்களில் தேக்கம் ஏற்படும் நேரத்தில் கூட ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர ஊன்று கோலாக இருக்கக்கூடாது என்றும் பேசினார்.

தேர்வில் வெற்றி பெறுபவர்களில் டாப் மதிப்பெண் எடுப்பவர்களில் ஒருவருக்கு மடிக்கனிணியும் இரண்டாம் பரிசாக 2முதல் 10வகுப்பு வரை வகுப்பு வாரியாக ஒருவருக்கு டேப்லெட் மற்றும் 3ஆம் பரிசாக வகுப்பு வாரியாக 5 நபர்களுக்கு ஸ்போர்ட்ஸ் வாட்ச் என தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி ஆண்டு விழா தின நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்றும்,

தேர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஆல்மைட்டி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமா, சாரதாசெந்தில்குமார் உட்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.06.2026 - 09:43:50
Privacy-Data & cookie usage: