ப்ளஸ்மேக்ஸ் நிறுவனர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்குகள் வழங்கினார்.

schedule
2021-12-20 | 14:24h
update
2022-07-07 | 16:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On behalf of Plusmax, Malaysian businessman Dato PRAKADEESH KUMAR handed over school bags to Poolambadi Government School students.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார் (DATO. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies). இவர் மலேசியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல்நாடுகளில் ப்ளஸ்மேக்ஸ் நிறுனத்தை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் இவர்,பிறந்த ஊரான பூலாம்பாடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பல உதவிகளை செய்து வருகிறார். பூலாம்பாடி அரசுமேல்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு உதவி, ப்ளஸ் டூ இறுதி தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி போன்ற உதவிகளை செய்து வருகிறார். மேலும் பூலாம்பாடி கிராமத்தின் வளர்ச்சிக்காக பொதுமக்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மலேசியாவில் இருந்து பூலாம்பாடி வந்துள்ள டத்தோ பிரகதீஸ்குமார், பூலாம்பாடி கிராமத்திற்கு தேவையானவற்றை சொந்த செலவில் செய்து தர பொதுமகக்களுடன் ஆலோசித்து வருகிறார். அவர்,பூலாம்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 293 மாணவர்களுக்கு இலவமாக ஸ்கூல் பேக்குகளை வழங்கிய அவர், நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தினார். பள்ளி ஆசிரியர்கள் வகுப்பறை கட்டடங்களுக்கு வர்ணம் பூசி தரமாறு கேட்டனர். அதை நான் செய்து தருவதாக கூறிய டத்தோ எஸ். பிரகதீஸ்குமார், அரசு பள்ளிக்கு வேறு ஏதேனும் வசதிகள் தேவைப்பட்டால் கேளுங்கள் அனைத்தையும் செய்து தர தயாராக இருப்பதாக கூறினார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 07:27:21
Privacy-Data & cookie usage: