பெரம்பலூர் டவுண் லயன்ஸ் சங்கம் சார்பில், இருதய நோய்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம்

schedule
2019-11-23 | 07:07h
update
2019-11-23 | 07:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On behalf of the Perambalur Town Lions Association, a free special medical camp for heart disease


பெரம்பலூரில் இன்று, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் பெரம்பலூர் டவுண் லயன்ஸ் சங்கம், ரோவர் கல்வி நிறுவனங்கள், மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி & மருத்துவமனை சார்பில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருதய நோய்களுக்கான இலவச சிறப்பு ஆலோசனை முகாம், சங்கத்தின் தலைவர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. அச்சங்கத்தின் சாசனத் தலைவரும், சிவம் டிரேடர்ஸ் நிறுவனருமான சிவசண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தனலட்சுமிசீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ.சீனிவாசன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ரோவர் கல்வி குழும மேலாண் இயக்குனர் கே.வரதராஜன் முகாமை தொடங்கி வைத்தார். கவுரவ விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.டி.சீனிவாசன் மற்றும் விக்டரி லயன்ஸ் சங்கம் மற்றும் டீரிம் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனர் 007 மு.இமயவரம்பன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், மருத்துவர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயர்கள், பயனாளிகள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு நலவாழ்வு ஆலோசனை பெற்றனர். மேலும், மருத்துவர்கள் மருந்து மாத்திரைகள் வழங்கியதுடன் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு விளக்கம் அளித்து பரிந்துரையும் கட்டணமில்லாமல் இலவசமாக அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னதாக எம்.நீதிபதி, மண்டலத் தலைவர் எஸ்.ஆராக்கியதாஸ், வட்டத் தலைவர் சுதாகர், பொருளாளர் ஜி.சுதாகர், ஜி.என்.பி ஒஜிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் டி.சரவணன் நன்றி கூறினார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 23:19:58
Privacy-Data & cookie usage: