பெரம்பலூரில், மாவட்ட அளவிலான 23-வது தேசிய இளைஞர் விழா, ஜன.03 -ல் நடக்கிறது!

schedule
2020-01-01 | 10:31h
update
2020-01-01 | 10:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

on Jan. 03! District Level-23rd National Youth Festival is being held in Perambalur

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

23-வது தேசிய இளைஞா; விழா உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் எதிர்வரும் 12.01.2020 முதல் 16.01.2020 வரை நடைபெற உள்ளதால் மாவட்ட அளவிலான 23-வது தேசிய இளைஞர் விழா 03.01.2020 அன்று பெரம்பலூரில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகத்தில் காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாட்டு, ஓரங்க நாடகம் (ஆங்கிலம் அல்லது ஹிந்தி), கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப்போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதார், கிடார் , தபேலா, மணிப்புரி நடனம், பரத நாட்டியம், குச்சுப்புடி, கதக் மற்றும் ஒடிஸி நடனம் ஆகிய நடனப்போட்டிகள் நடைபெற உள்ளது.

Advertisement

தேர்வுப் போட்டியில் மாவட்ட அளவிலான இளைஞர் விழாவில் 15 வயது முதல் 29-வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் வயதுச்சான்றிதழ் பெற்று வரவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இத்தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவோர் மாநில அளவிலான தேர்வுப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். அதில் சிறந்த ஆடவர் மற்றும் மகளிர் 100 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் நடைபெற உள்ள 23-வது தேசிய இளைஞர் விழாவில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட உள்ளனர். விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in -ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்போட்டிகளில் அதிக அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவா; திருமதி.வே. சாந்தா அவா;கள் செய்திக் குறிப்பில் தொpவித்துள்ளாh;.

மேற்காணும் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தகுதியான நபா;களிடமிருந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 02.01.2020-ம் தேதிக்குள் ywtnadu@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பித்து போட்டியில் கலந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 15:49:25
Privacy-Data & cookie usage: