நவம்பர் 8, 9 ல் சிபிஎம் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மாநாடு திரளாக பங்கேற்க வரவேற்புக்குழு கூட்டத்தில் முடிவு.

schedule
2017-10-23 | 17:13h
update
2017-11-15 | 12:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On November 8, 9, CPM decided to attend a reception meeting to participate in the Perambalur-Ariyalur district convention.

பெரம்பலூர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட 7வது மாநாடு நவம்பா; 8 மற்றும் 9ஆம் தேதி பெரம்பலூர் ஜே.கே. திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதையொட்டி வரவேற்புக்குழு கூட்டம் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisement

மாவட்ட செயலாளா; ஆர்.மணிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெரம்பலூர் ஆர்.அழகர்சாமி, என்.செல்லதுரை, எ.கலையரசி, பி.ரமேஷ் அரியலூர் ஆர்.சிற்றம்பலம் பி.துரைசாமி, கே.மகாராஜன், எம்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் சி.கருணாகரன் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு எம்.சின்னதுரை மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து விளக்கவுரையாற்றினார்.

மாநாட்டில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எ.லாசர் மற்றும் கட்சியின் மாநில பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

புதுகை பூபாளம் குழுவினரின் அரசியல் நையாண்டி கலைநிகழ்ச்சியும் பின்னர் பேரணியும், பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளதால் பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வரவேற்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் மற்றும் எ.கணேசன், எஸ்.அகஸ்டின், எம்.கருணாநிதி, பி.கிருஷ்ணசாமி, பி.முத்துசாமி உள்பட ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 08:33:29
Privacy-Data & cookie usage: