நாமக்கல் அதிமுகவினர் சார்பில் எம்ஜிஆர் 31வது நினைவு தினம் அனுசரிப்பு

schedule
2018-12-24 | 17:41h
update
2018-12-24 | 17:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On the behalf of Namakkal AIADMK Garland, the 31st day of the MGR is Memorial day

நாமக்கல்லில் அதிமுகவினர் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 31வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 31ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு நாமக்கல் அதிமுகவினர் சார்பில் பரமத்தி ரோடு செல்லம்ப கவுண்டர் பூங்கா முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

விழாவிற்கு நாமக்கல் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் மயில் சுந்தரம், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

விழாவில் சிறுபான்மையினர் நல பிரிவு மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா,நகர துணைச்செயலாளர்கள் நரசிம்மன், சன்பாலு, நாமக்கல் நகரகூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன், நாமக்கல் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைத்தலைர் பொரி சண்முகம், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் குமுதம் நாகராஜன், நாமக்கல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் பழனிவேல், புவனேஸ்வரன், மாதேஸ்வரன் பாலன், ராமசாமி, 14 வது வார்டு செயலாளர் சுப்பிரமணி , சுமங்கலி ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 20:51:02
Privacy-Data & cookie usage: