கருணாநிதி பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிப்பு

schedule
2018-06-05 | 18:06h
update
2026-05-03 | 00:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On the birthday of Karunanidhi, the golden ring on behalf of the District DMK for children born

திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளில் நாமக்கல் அரசு ஆஸ்பதிரியில் பிறந்த குழந்தைகளுக்கு மாவட்ட திமுக சார்பில் மோதிரம் அணிவிக்கப்பட்டது.

Advertisement

திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் இளங்கோவன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். நகர திமுக செயலாளர்கள் நாமக்கல் மணிமாறன், ராசிபுரம் சங்கர், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், துணை செயலாளர் சிவக்குமார், நகர துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஆனந்த், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் பார்த்திபன், விவசாய அணி துணை அமைப்பாளர் அம்மையப்பன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் மோகன், பிரபு, மார்டின் கிறிஸ்டோபர், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஈஸ்வரன், பூபதி, ரவீந்திரன், கமலம் வார்டு கழக செயலாளர்கள் அருள்செல்வன், சரவணன், முன்னாள் நகர பொருளாளர் நடராஜன், பர்கத் அலி, அருண்லால், சிவராமன், முருகேசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2026 - 00:29:52
Privacy-Data & cookie usage: