கலைஞரின் 98- வது பிறந்த நாளை முன்னிட்டு, கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களுக்கு பெரம்பலூரில் ரூ. 3 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கினார் ஆ.இராசா எம்.பி!

schedule
2021-10-07 | 06:23h
update
2021-10-07 | 06:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On the eve of the Ex.CM karunanithi 98th birthday, a Rs. A.Raja MP donates Rs 3 lakh relief aid

கலைஞர் கருணாநிதியின் 98- வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூடு (எ)பொன்.கோவிந்தராஜ் ஏற்பாட்டில் துறைமங்கலம் அரசு பேருந்து பணிமனை முன்புறம், நினைவுத் தூண் மற்றும் கல்வெட்டை திறந்து வைத்த திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை கொரோனா முன்களப் பணியாளர்கள் மற்றும் வீடு,வீடாக சென்று பால் ஊற்றும் பால்காரர்கள், வீடுகள் தோறும் தினசரி பேப்பர் போடுபவர்கள் மற்றும் உள்ளிட்ட சுமார் 300 க்கும் மேறபட்டோருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ.3 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகையை வழங்கினார். மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ம.ராஜ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அட்சயகோபால் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் செ.அண்ணாதுரை, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், எளம்பலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்ஆர்.சி.ஆர். ராமசாமி, பொறியாளர் தங்க.கண்ணண் , வழக்கறிஞரகள் மணிவண்ணன் , முகமது இலியாஸ், செங்குணம் ஒன்றிய கவுண்சிலர் கலையரசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், தொ.மு.ச. மாவட்ட கவுண்சில் தலைவர் கே.கே.எம் குமார், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, இ.பி.கணேசன், தலைமை கழக பேச்சாளர் மு.விஜயரத்தினம், சின்ன கண்ணண், பெரம்பலூர் ஒன்றிய துணை செயலாளர்கள் ஆதித்யன், லட்சுமணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் நா.சுரேஷ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மகளிரணி பாத்திமாசெல்வராஜ், நகர மகளிரணி அமைப்பாளர் அங்கையற்கண்ணி சந்திரபிரகாஷ், நகர மகளிரணி துணை அமைப்பாளர் எஸ்.விஜிபுளோராரெஜி, செல்வராஜ், மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


படவிளக்கம்:

பெரம்பலூர் துறைமங்கலத்தில், வீடுவீடாக பேப்பர் போடுபவர்கள், பால் ஊற்றுபவர்கள் மற்றும் கொரானா தடுப்பு முன்களப்பணியாளர்களுக்கு நிவாரண உதவித் தொகையை, திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி வழங்கிய போது எடுத்தப்படம். அருகில் மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், முன்னாள் பெரம்பலூர் பேரூராட்சித் தலைவர் ஜூடு (எ)பொன்.கோவிந்தராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 16:08:04
Privacy-Data & cookie usage: