உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டம்: கலெக்டர் தகவல்!

schedule
2022-10-27 | 17:03h
update
2026-06-18 | 06:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On the occasion of Local Bodies Day, Gram Sabha Meeting in Perambalur District: Collector Information!

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வரும் நவ.1 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சி தலைவர்களால் நடத்தப்பட உள்ளது, என பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல், அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும்.

Advertisement

மேலும், கீழ்க்காணும் கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும்: கிராம சபைக்கூட்டங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், ஊழியர்களை அங்கீகரித்தல், கலந்துரையாடல்கள் நடத்துதல், முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல்,

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II-இன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் மிஷன் இயக்கம், மக்கள் திட்ட இயக்கம் (People Plan Campaign), வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி / சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல்?

2021-22 மற்றும் 2022-23-ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை.
மக்கள் நிலை ஆய்வு பட்டியலில் விடுபட்ட / புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்த்தல்,

மேலும் 01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் எடுத்துக் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால், பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 06:01:50
Privacy-Data & cookie usage: