உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு செல்ல பிராணிகளுக்கு, பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை வெறிநோய் தடுப்பூசி!

schedule
2022-09-28 | 12:07h
update
2022-09-28 | 12:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On the occasion of World Rabies Day, Perambalur District Veterinary Department rabies vaccination for pets!

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு இன்று காலை 8.00 மணி முதல் பெரம்பலூர் கால்நடை மருந்தக வளாகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமில் பொது மக்கள் தங்களது செல்ல பிராணிகள் மற்றும் சமூக நாய்களை கொண்டு வந்து இலவச தடுப்பூசி போட்டனர்.

Advertisement

மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில், உதவி இயக்குநர் குணசேகர் மற்றும் மருத்துவ குழுவினர் திருநாவுக்கரசு, பெரியசாமி, மணிகண்டன், செந்தில்குமார், முத்துசெல்வன், முரளிநாதன், செல்வம், சிவா, குமரேசன், கோகுல், மற்றும் கால்நடை ஆய்வாளர் திருமதி தீபா, உதவியாளர் வெங்கடாசலம், ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

லேப்ரடார், டாபர்மேன், பொமரேனியன், ஷிட்ஷூ, டால்மேசியன், டேக்ஷண்ட், பக்ஃ, கன்னி மற்றும் கோல்டன் ரிட்ரீவர் உள்ளிட்ட வீட்டு செல்ல பிராணிகளும், பல சமூக நாய்களும் கலந்து கொண்டு பயன் பெற்றன.

படவிளக்கம்: உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் ஆயுதப் படை போதை பொருள் கண்டுபிடிப்பு பிரிவு, சூர்யா என்ற லேப்ரடார் இன நாய்க்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்ட போது எடுத்தப் படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 00:24:44
Privacy-Data & cookie usage: