நாமக்கல்லில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் !

schedule
2018-05-11 | 14:44h
update
2026-01-11 | 09:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

One day free training camp on poultry farming in Namakkal

நாமக்கல் : நாமக்கல்லில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 15ம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் நாட்டுக்கோழி ரகங்கள், தீவன மற்றும் நோய் மேலாண்மை, அடை முட்டை பாதுகாக்கும் முறைகள், இளக்குஞ்சுகள் பராமரிப்பு, குடற்புழுநீக்கம் மற்றும் தடுப்பூசி அட்டவணை, மூலிகை மருத்துவம் மற்றும் மரபுசாரா தீவனங்கள் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 14ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.01.2026 - 09:04:07
Privacy-Data & cookie usage: