பெரம்பலூர் அருகே பஸ்

லாரி மோதல் ஒருவர் பலி! 3 பேர் காயம்!

schedule
2024-01-06 | 07:33h
update
2024-01-06 | 07:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

One killed in bus-lorry collision near Perambalur! 3 people injured!

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் மாநிலம், மகிஷ்கர் மாவட்டம், லோபானியா பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு ஆம்னி பஸ்சில், தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சை ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்களகிரி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் மகன் பரத் (37) என்பவர் ஓட்டி வந்தார்.

Advertisement

இன்று காலை சுமார் 4.20 மணிக்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது கொண்டைக்காரன் பாலத்திற்கு அருகே முன்னால் திருச்சியை நோக்கி லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த லாரி மீது பின்னால் சென்ற பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மோதி பலத்த சத்தத்தை ஏற்படுத்தி விபத்திற்கு உள்ளானது.

இதில், பயணம் செய்த குஜராத் மாநிலம், மகிஷ்கர் மாவட்டம், லோபானியா கிராமத்தை சேர்ந்த நட்டுபாய் (45), மற்றும் உஷா பேன் (45) அல்பீஸ் (27), பஸ் டிரைவர் பரத் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், நட்டுபாய் உயிரிழந்தார்.

லாரி ஒட்டுநரான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா, சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த பிராண் மகன் ஹிலால் (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 04:40:23
Privacy-Data & cookie usage: