பெரம்பலூர் அருகே அடுத்தடுத்த 3 கோயில்களில், உண்டியல் பணம் ஒரு லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை!  

schedule
2022-02-20 | 13:23h
update
2022-02-20 | 13:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

One lakh robbery in 3 temples near Perambalur: Police investigation!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் எல்லையம்மன் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்கள் உள்ளது.

நேற்று மாலை பூசாரி மருதமுத்து கோயிலுக்கு விளக்கு போட்டு விட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்று காலை 6 மணி அளவில் தர்மகத்தா மனைவி சரோஜா பால் கறக்க செல்லும்பொழுது கோவிலை பார்த்த போது, கோயில் பூட்டு உடைந்து கேட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு, தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். கோவில் சென்று பார்த்த போது இரண்டு உண்டியல்களையும் காணவில்லை. பின்னர் தேடிய போது அம்மா பூங்கா அருகில் ஒரு உண்டியலும், பெருமத்தூர் பிரிவு சாலை அருகே ஒரு உண்டியலும், கிடந்ததை கண்டு பிடித்தனர். அதில் பக்தர்கள் செலுத்திய சுமார் 15 ஆயிரம் பணத்தை காணவில்லை.

Advertisement

இதே போன்று, ஓலைப்பாடியில் உள்ளது அய்யனார் கோவில். அதன் பூசாரி, நேற்று மதியம் 1 மணி அளவில் கோவிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று காலை அப்பகுதி மக்கள் பார்த்த போது, கோவிலை திறந்து கிடப்பதுடன், உண்டியலும் காணவில்லை என அறிந்து தேடிய போது, கல்லை வரும் வழியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகே கிடப்பதை அறிந்தனர்.

இந்த இரு கொள்ளை சம்பவங்கள் குறித்தும், கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் வந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிக்களையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 23:31:08
Privacy-Data & cookie usage: