பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

முதன்மைக் கல்வி அலுவலர்.

schedule
2016-06-17 | 17:05h
update
2026-09-23 | 01:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

#பெரம்பலூர் : நடைபெற உள்ள ஜுன் – ஜுலை 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுத அரசுத் தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வர்களும் (தட்கல் உட்பட) 18.06.2016 அன்று பிற்பகல் முதல் www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்வுட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
www.tngdc.gov.in, என்ற இணைய தளத்திற்கு சென்று DEPARTMENT OF EXAMINATION ONLINE APPLICATON என்பதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் SSLC Hall Ticket Download என்பதை கிளிக் செய்து தங்களது மார்ச் 2016 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்ளுடைய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்களுக்குக் குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கு வருகை புரிய வேண்டும்.

ஜுன் – ஜுலை 2016 சிறப்பு துணைப் பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதவதோடு அறிவியல்பாட கருத்தியல் தேர்வையும் மீளவும் கண்டிப்பாக எழுத வேண்டும்.

செய்முறைத் தேர்வெழுத வேண்டிய தனித் தேர்வகளுக்குத் தேர்வுக் கூட அனுமதி சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வுமையத்தில் 20.06.2016 மற்றும் 21.06.2016 ஆகிய இருநாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். எனவே இத் தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை மேற்படி நாட்களில் அவசியம் அணுகுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 01:43:45
Privacy-Data & cookie usage: