மாசு கட்டுப்பாடு வாரியம் தேர்வு செய்த இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்

schedule
2017-08-17 | 16:17h
update
2026-07-03 | 10:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Only Vinayaka idols should be dug in places chosen by pollution control board

மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதூர்த்தி விழாவினை கொண்டாடிட வேண்டும்.

Advertisement

அதன்படி விநாயகர்சதூர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீரில் கரைக்கப்படும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக இரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடுகின்றன.

இதை தவிர்க்கும் பொருட்டு களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்தி, நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.

இரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது. பெரம்பலூர் மாவட்டத்தில், பூஜித்த விநாயகர் சிலைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட திருச்சி காவேரி ஆற்றில் மட்டுமே கரைத்து, விநாயர் சதூர்த்தி விழாவினை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடிட வேண்டும், என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 10:04:16
Privacy-Data & cookie usage: