பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகள் திறப்பு; குடிமகன்கள் கொண்டாட்டம்!!

schedule
2020-05-07 | 07:45h
update
2020-05-07 | 07:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Opening of liquor shops in Perambalur district with strong police protection; Citizens Celebration !!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே வரிசை கட்டி நின்ற குடிமகன்கள் உற்சாகத்துடன் மதுப்புட்டிகளை அள்ளி சென்ற வண்ணம் இருந்தனர். மேலும், போலீசார் பாதுகாப்பு அளித்ததோடு, மைக் செட் வைத்து சமூக இடைவெளி பின்பற்ற வலியுறுத்தி முழக்கமிட்டு, ஒழுங்குப் படுத்தினர். கடந்த 40 நாட்களாக ஏக்கத்தில் இருந்த மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியாக மதுபாட்டிகளை விலையேற்றத்தையும் பொருட்படுத்தாது அள்ளி சென்றனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, 4 ரோடு, ஆத்தூர் சாலை, எசனை, உப்போடை, சிறுவாச்சூர், இரூர், பாடாலூர், நக்கசேலம், செட்டிகுளம், பேரளி, அருமடல், கொளக்காநத்தம், அரும்பாவூர், பூலாம்பாடி, வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், மேலமாத்தூர், பரவாய், பெருமத்தூர், சின்னாறு எறையூர், அகரம்சீகூர், வாலிகண்டபுரம், கீழபுலியூர், வண்ணாரம்பூண்டி ஆகிய இடங்களில் 31 கடைகள் திறகப்பட்டதில், வெயிலையும் பொருட்படுத்தாது கூட்டம் நிரம்பி வருகிறது.

Advertisement

குன்னம், எசனை உள்ளிட்ட பல கிராமங்களில், பொதுமக்கள் மதுக்கடைகள் திறந்ததற்கு கொரோனோ தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்து போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 22:06:27
Privacy-Data & cookie usage: