ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கம்; பயணிகளிடையே வரவேற்பு! போக்குவரத்துறை அமைச்சருக்கு பாராட்டு!!

schedule
2024-10-30 | 07:31h
update
2024-10-30 | 07:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Operation of private buses on contractual basis; Welcome among travelers! Appreciation for the Minister of Transport!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பேருந்துகள் மக்கள் சேவைக்கு இயக்கப்பபட்டு வந்தாலும், அவை கி.மீ ஒன்றுக்கு ரூ. 60 நட்டத்தில் இயங்குகின்றன.

விழாக்காலங்களில் பேருந்துகளை மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க அதிக பேருந்துகள் தேவைப்படுவதோடு, அந்த தேவைகளுக்கு அதிக அளவில் அந்த விழா நாட்களுக்களுக்காக மட்டும் வாங்கி பணிமணையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதோடு, வாகன தேய்மானம் மற்றும் முதலீட்டு மதிப்பும் குறையும். அதோடு, அந்த வாகனத்திற்கான பராமரிப்பு செலவு, தொழிலார்கள் என நட்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையில் மேலும், பல நிதிசார்ந்த இழப்புகளை இழக்க நேரிடும்.

Advertisement

இதனை தவிர்க்ன தற்போதைய தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர், முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று சோதனை முறையில், ஆயுதபூஜையின் போது ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து பரிசார்த்த முறையில் இயக்கப்பட்டது. பின்னர், தற்போது தீபாவளி பண்டிகைக்கு அதிகளவிலான தனியாரிடம் உள்ள ஸ்பேர் பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. அது தற்போது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட பேருந்தில் வந்த பயணி ஒருவர் தெரிவித்ததாவது:

தனியார் பேருந்துகள் சுத்தமாக உள்ளது. மேலும், சொகுசாக உள்ளது. வண்டிகள் பராமரிப்பில் இன்ஜின் சத்தம் அவ்வளவாக இல்லை. இருக்கைகள் தரமாக உள்ளது. மேலும், அரசு பேருந்து கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இது வரவேற்க தக்கது, விழாக்காலங்களில் தொடர்ந்து இது போன்று அரசு இயக்ககினால், காலதாமதம், கூட்ட நெரிசல், தடங்கலின்றி பொதுமக்கள் ஊருக்கு செல்ல வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.

சென்னையில் இருந்து திருச்சி சென்ற பயணி ஒருவர் தெரிவித்ததாவது; வழக்கமாக வரும் அரசுப் பேருந்தில் வந்திருந்தால், சட்டையின் பின்புறம் எண்ணெய் பிசுக்கு போன்ற அழுக்கு போல் இருக்கும். ஆங்காங்கே , பான்பராக், எச்சில் துப்பி வைத்திருப்பார்கள். தனியார் டூரிஸ்ட் பஸ்களை இயக்குவதால் ஆம்னி பஸ்களில் செல்வது போல் சொகுசு உள்ளது. பயணக் களைப்பும் தெரியவில்லை. தொடர்ந்து, அரசு ஒப்பந்த அடிப்படையில் இதே போல விழாக்காலங்களில் தரமான பேருந்துகளை இயக்கி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர செய்யவேண்டும் என்றும், போக்குவரத் துறை அமைச்சருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.08.2026 - 12:51:41
Privacy-Data & cookie usage: