பெரம்பலூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு; கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்!

schedule
2024-02-26 | 09:47h
update
2024-02-26 | 13:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Opposition to love near Perambalur; Lovers who committed suicide by jumping into a well!

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் யுகேஷ்(20). பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவரும், அதே ஊரை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. மனமுடைந்த யுகேஷூம் மாணவியும் நேற்றிரவு வீட்டை விட்டு மாயமான நிலையில், இவர்களது உறவினரான ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் காதலர்கள் இருவரும் இறந்த நிலையில் சடலமாக தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து இளம் காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.08.2026 - 10:56:35
Privacy-Data & cookie usage: