திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் இலவசமாக எழுதி கொள்ள ஏற்பாடு

schedule
2017-09-23 | 10:49h
update
2026-07-03 | 20:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Organize the public to write free of charge on Monday Redressal day

பெரம்பலூர் : திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் நேரு யுவகேந்திரா நிறுவன அலுவலர்கள் மூலமாக இலவசமாக மனு எழுதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தகவல் தெரிவித்துள்ளர்.

Advertisement

வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் அன்றைய தினம் நேரடியாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்குவார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புற பகுதியிலிருந்து பொதுமக்கள் அதிகமாக வருவதால் அவர்களது குறைகள் சம்மந்தமான மனுவினை இலவசமாக எழுதி கொடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் நேரு யுவகேந்திரா நிறுவனம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் அன்று மனு கொடுக்க வரும் பொதுமக்கள் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நேரு யுவகேந்திரா நிறுவன அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 20:29:05
Privacy-Data & cookie usage: