நாமக்கல்லில் காந்தி சிலை அமைக்க அமைப்புக்குழு நடவடிக்கை

schedule
2018-11-27 | 05:49h
update
2026-07-06 | 09:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Organizing committee to set up Gandhi statue in Namakkal

நாமக்கல் மகாத்மாகாந்தி சிலை அமைப்புடுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல்லில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான செலம்பகவுண்டர் பூங்காவின் வடக்குப்பகுதியில் காந்தி சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று நாமக்கல்லுக்கு வந்த தமிழக கவர்னரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டரிடமும், நகராட்சி கமிஷனரிடமும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதையொட்டி காந்தி சிலை அமைக்க சிலை அமைப்புக்குழு சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் நேரு பூங்காவில் காங்கிரஸ் பிரமுகர்களால் நேரு சிலை அமைக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு காமராஜ் தொண்டர்களால் காமராஜர் சிலை அமைக்கப்பட்டது.

தற்காலத்தில் தனி மனித ஒழுக்கம் சீர்கெட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் அதிகம் விளையாடும் செலம்பகவுண்டர் பூங்காவில் மகாத்மா காந்தியின் திருஉருவ வென்கலச்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இச்சிலை அமைக்க நாமக்கல் நகர பிரமுகர்கள் அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்று சிலை அமைக்குழு ஒருங்கிணைப்பாõளர்கள் ஏகாம்பரம், சீனிவாசன், மாணிக்கம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 09:39:33
Privacy-Data & cookie usage: