பெரம்பலூர் அருகே காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் கொலையில், கள்ளக்காதலன் கைது!

schedule
2021-09-22 | 08:14h
update
2021-09-22 | 18:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
paramour arrested for killing woman in rotten condition in forest near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் காந்தி நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி புஷ்பா(வயது 47). விஜயன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 24 வயதில் பெண்ணும் 22 வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் டெல்லியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பா தனது தாயார் பெருமாயி உடன் வசித்து வந்தார். கடந்த 9ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற புஷ்பா வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து பெருமாயி அரும்பாவூர் போலீசில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அன்னமங்கலம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த உடலை பெருமாயி இடம் காண்பித்து இறந்து கிடந்தது புஷ்பா என்பதை உறுதி செய்தனர். பின்னர் புஷ்பாவின் செல்போன் இணைப்புக்கு வந்த தொடர்பினை வைத்து விசாரணை நடத்தியபோது அ.மேட்டூரை சேர்ந்த சோலைமுத்து(45) கடைசியாக பேசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சோலைமுத்துவை கைது செய்து நடத்திய விசாரணையில், புஷ்பா உடன் கடந்த சில மாதங்களாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், கடந்த 9 ந் தேதி புஷ்பாவை அன்னமங்கலம் வனப் பகுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது புஷ்பா சோலைமுத்துவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. புஷ்பாவிற்கு மற்றோரு நபருடன் தொடர்பும் இருந்துள்ளதாகவும், அதில் குடிபோதையில் இருந்த சோலைமுத்து, ஆத்திரமடைந்து புஷ்பாவின் தலை மீது கல்லை போட்டு கொலை செய்து விட்டு, அந்த பெண் குழுவில் எடுத்த கடனை கட்டுவதற்காக வைத்திருந்த ரூ. 25 ஆயிரத்தை எடுத்து கொண்டு தப்பியதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ரூ.25 ஆயிரம் பணத்தை சோலைமுத்து செலவு செய்து விட்டான். மேலும் இந்த கொலையில் அவருடன் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டு உள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இச்சம்பவம் மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்.
Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 08:22:55
Privacy-Data & cookie usage: