கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2023-04-20 | 17:04h
update
2023-04-20 | 17:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Parents can apply to enroll children in schools under Right to Education Act: Perambalur Collector Info!

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 சட்டப் பிரிவு 12(1) (சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவிகிதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு இத்திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பில் மொத்தமுள்ள சேர்க்கைக்கான 25 சதவிகிதம் இடங்களுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் வரும் 20.04.2023 முதல் 18.05.2023 வரை இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி (rte.tnschools.gov.in) என்ற இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், பெரம்பலூர் (இ)பேரளி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி) பெரம்பலூர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் , வட்டார வள மையங்கள் ஆகிய மையங்களில் எவ்வித கட்டணங்களுமின்றி இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சேர்க்க விரும்பும் பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ளலாம், எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பில் பள்ளியில் சேர்வதற்கு அருகாமையிடம் 1 கிலோ மீட்டர் ஆகும், நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர்/எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்/ மூன்றாம் பாலினத்தவர்/ துப்புரவு தொழிலாளியின் குழந்தை/ மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது பிறப்புச்சான்றிதழ், சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடசான்று மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கானச் சான்று, மாற்றுத்திறனாளி சான்று, மூன்றாம் பாலினத்தவருக்கான சான்று, ஆதரவற்றோர் சான்று போன்ற சான்றுகளை கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.08.2026 - 13:10:01
Privacy-Data & cookie usage: