திருமாந்துறை நோவா நகரில் பகுதி நேர ரேசன் கடை: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

schedule
2022-07-15 | 09:19h
update
2022-07-15 | 09:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Part-time ration shop in Nova Nagar, Tirumandurai: Minister Sivasankar inaugurated.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம். திருமாந்துறை ஊராட்சியில் உள்ள நோவா நகரில் வசிக்கும் பொதுமக்கள் 3 -கி.மீ.தூரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தி.கீரனூர் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் பொருட்கள் பெற்று வந்தனர்‌.

Advertisement

அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நோவா நகரில் பகுதி நேர நியாய விலைக் கடையை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று காலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

கலெக்டர் வெங்கட்பிரியா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.சங்கர், சரக துணைப் பதிவாளர் த.பாண்டித்துரை, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள்,

மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர்உசேன், துணை தலைவர் எ.ரசூல்அகமது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 03:42:32
Privacy-Data & cookie usage: