நாமக்கல் நகர திமுக சார்பில் கட்சிக் கொடியேற்று விழா

schedule
2019-01-03 | 16:39h
update
2019-01-04 | 16:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Party flag acceptance on behalf of Town DMK, Namakkal

நாமக்கல்லில் நகர திமுக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் வார்டுகளில் கட்சி கொடியேற்றி வைத்து திண்ணைப் பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இதில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 175 ஊராட்சிகளில் திண்ணைப் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் 1001 இடங்களில் கட்சிக் கொடியேற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பார்லி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் பொங்கலூர்பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.

இதையொட்டி நாமக்கல் நகர திமுக சார்பில் முதற்கட்டமாக திருச்சி ரோட்டில் உள்ள 34 வது வார்டில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான காந்திசெல்வன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர்பழனிசாமி கலந்து கொண்டு கட்சிக் கொடியேற்றி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ பார்த்தீபன் கொடிக்கம்ப கல்வெட்டை திறந்து வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் ஆயிரம் இடங்களில் கொடியேற்றப்படுகிறது. 1001 இடத்தில் கட்சிக்கொடியினை திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று ஏற்றிவைக்கிறார் என மாவட்ட பொறுப்பாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன்,செல்வமணி, பூபதி, பால்ரவி, டியூசன் மணி, ரமேஷ், மனோகரன், அன்பரசு, சரோஜா, சத்தியபாபு, பாலாஜி, மார்டின் கிறிஸ்டோபர் மற்றும் வார்டு பிரதிநிதிகள் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.03.2026 - 02:16:13
Privacy-Data & cookie usage: