பெரம்பலூரில் பாஸ்போர்ட் சேவை மையம் : எம்.பி. ஆர்.பி.மருதராஜா தொடங்கி வைத்தார்.

schedule
2018-03-17 | 14:04h
update
2026-06-07 | 04:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Passport service center at Perambalur: R.P. Marutaraja M.P., inaugurated.

பெரம்பலூர், ஆத்தூர் சாலையில் உள்ள தபால் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில், தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் தொடக்க விழா இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சவுதி, அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

Advertisement

நீண்ட நாட்களாக பொதுமக்கள் திருச்சிக்கு சென்றே பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை பெற்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் தனியார் டிராவல்ஸ் ஏஜன்சிகள் மூலம் சேவைகளை பெற்று வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இன்று பெரம்பலூரில் அதன் சேவை தொடக்க விழா நடைபெற்றது. சேவை மையத்தினை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதராஜா தொடங்கி வைத்தார்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் அளிப்பது, புதிய பாஸ்போர்ட் பெறுவது மற்றும் புதுப்பிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த சேவை மையத்தில் மூலம் பெற்றுக் கொள்ளலாம்

இந்நிகழ்ச்சயில், திருச்சி மத்திய மண்டல தபால் துறை தலைமை அஞ்சல்துறைத் தலைவர் ஜெ.டி. வெங்கடேஸ்வரலு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.லிங்குசாமி உள்ளிட்ட அஞ்சல் மற்றும் பாஸ்போர்ட் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 04:53:05
Privacy-Data & cookie usage: