சிறுவாச்சூர் ஆல்மைட்டி பள்ளி சார்பில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அமைதி பேரணி

schedule
2019-02-18 | 16:14h
update
2019-02-18 | 16:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Peace march for heroic death soldiers by,  Siruvachur almighty School Students


சிறுவாச்சூர் ஆல்மைட்டி பள்ளி சார்பில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழ் அஞ்சலி, அமைதி பேரணியும் நடத்தினர்.

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவர்கள் சார்பில், காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலால் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிறுவாச்சூர் மதுரகாளிம்மன் கோவிலில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வரை கருப்பு கொடியுடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளிமுதல்வர் டாக்டர் கே.சிவகாமி முன்னிலை வகித்தார். பின்னர் பள்ளியில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளியின் துணை முதல்வர் சாரதாசெந்தில்குமார் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரோதயம், ஹேமா மற்றும் ஆசிரியைகள், ஆசிரியர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 16:53:14
Privacy-Data & cookie usage: