மாவட்ட ஆட்சியரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதிய இயக்குநர் கு.அண்ணாதுரை தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் முன்னிலையில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 17.02.2016 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த குறைதீர்க்கும் மனுக்களை இரண்டு பிரதிகள் 05.02.2016 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்கலாம. மேலும் வரும் பிப்.17. அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!