ஓய்வூதியதாரர்கள் அரசின் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

schedule
2017-05-18 | 14:47h
update
2026-06-27 | 10:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட கருவூல அலுவலர் விடுத்துள்ள தகவல் :

மாவட்ட , சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

Advertisement

எனவே கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேர்காணலுக்கு கருவூலத்திற்கு வரும்பொழுது அளிக்கவேண்டும். ஏற்கனவே நேர்க்காணல் முடித்த ஓய்வூதியதாரர்கள் அதற்கான படிவத்தினை சம்பந்தப்பட்ட கருவூலத்தில் நேரிலோ, தபால் மூலமோ அல்லது தனிநபர் மூலமாக அளிக்கவேண்டும்.

இப்படிவத்தினை தமிழ்நாடு அரசு இணையதளத்தில் அரசாணையுடன் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது பெரம்பலூர் மாவட்ட அனைத்து சார்கருவூலங்கள் மற்றும் மாவட்ட கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 10:49:37
Privacy-Data & cookie usage: