பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்!

schedule
2019-02-16 | 06:19h
update
2019-02-16 | 06:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

People blocked for roadblock near Perambalur for Drinking water!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள நாரணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயகோபாலபுரம் உள்ளது.

இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என பல முறை வட்டார வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஆனால், அதிகாரிகள் நடடிவக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகோபாலபுரம் பொது மக்கள் இன்று காலை 9 மணியளவில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் பாடாலூர் போலீசார், நெடுஞ்சாலை சுற்றுக் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன், பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனால் சுமார் 30 நிமிடங்கள் நடந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், வாகன ஓட்டிகள் பலரும் தாங்கள் போக வேண்டிய இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாக சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.09.2026 - 13:21:51
Privacy-Data & cookie usage: