People blocked the road for demanding drinking water in Perambalur!


பெரம்பலூர் நகராட்சி 21 வது வார்டு பொது மக்களுக்கு கடந்த 8 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து குடிதண்ணீர் வினியோகம் செய்யாத நகராட்சியை கண்டித்து பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து 3 ரோடு செல்லும் திருச்சி சாலையில், காலி குடங்களுடன் அப்பகுததியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் நகராட்சி பணியாளர்கள், சமசர பேச்சு வார்த்தை நடத்தி விரைவில், குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தன் பேரில், கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!