பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்!

schedule
2023-08-03 | 15:00h
update
2023-08-03 | 15:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

People blocked the road near Perambalur demanding drinking water!

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில், குடிநீர் கேட்டு, இன்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள 4 வது வார்டில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் ஊராட்சி சார்பில் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

குடிநீர் விநியோகம் செய்யும் கிணற்றில் நீரேற்றும் மோட்டார், பழுதானதாகவும், அதை நேற்று சரி செய்து, தண்ணீர் மற்ற வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தங்கள் 4 வார்டுக்கு தண்ணீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை துறையூர் – பெரம்பலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், ஊராட்சித் தலைவர் பிச்சைபிள்ளை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, தண்ணீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

இதனால், துறையூர் – பெரம்பலூர் சாலையில், சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 02:11:13
Privacy-Data & cookie usage: